Mooligai maruthuvam

அஸ்வகந்தாவின் மருத்துவப் பயன்கள்,அமுக்கிரா, Mooligai maruthuvam,Madurai Local Directory

அஸ்வகந்தாவின் மருத்துவப் பயன்கள்,அமுக்கிரா

அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு )

அமுக்கிராவுக்கு அசுவகந்தி அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்பதாக அசுவ 'கந்தம்' என்றழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் வடமொழியில் குதிரை என்பது பொருள். குதிரை பலத்தை வழங்கும் என்பதால் அசுவகந்தா என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது.
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தும் இவை மன அழுத்தம், மன பதட்டம் , இல்லறம் மூன்றின் குறைபாடுகளிலிருந்தும் விடுபட வேகமாக உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

​நிம்மதியான தூக்கம் பெற அஸ்வகந்தா

இன்று தூக்கமின்மை பிரச்சனையை பலரும் சந்தித்துவருகிறார்கள். பெரும்பாலும் தூக்கமின்மைக்கு காரணம் மன அழுத்தமும், சோர்வும் தான். அஸ்வகந்தாவில் இருக்கும் அடோப்டோஜினிக் மன சோர்வை நீக்கி மன அழுத்தத்தை குறைக்க செய்கிறது. தேவையில்லாமல் மனம் அடையும் பதட்டத்தையும் குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தூக்க மாத்திரை இல்லாமலேயே மனதை அமைதியாக்கி ஆழ்ந்த உறக்கத்தை கொடுப்பதற்கு அஸ்வகந்தா பெரிதும் உதவுகிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு அஸ்வகந்தா பொடியை சிட்டிகை பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான உறக்கம் பெற முடியும்.
அஸ்வகந்தா, அமுக்கிரா கிழங்கு,Ashwagandha
இதயம் சிறப்பாக செயல்பட உயிர் தரும் அமைப்புகளும், கழிவுகளை அகற்றும் அமைப்புகளும் சீராக செயல்பட வேண்டும். இதய தசையில் இறுக்கத்தை குறைக்கவும், தசைகளை உறுதிபடுத்தவும் இது உதவுகிறது.
தினம் ஒரு கப் அமுக்கிரான் பொடி கலந்த தேநீர் குடிப்பதன் மூலம் இதயத்தில் தமனிகளில் ரத்தகுழாய் அடைப்புகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை நிறைவாகவும் வேகமாகவும் அதிகரிக்க உதவுவதோடு இதயத்தை தாக்கும் நோய்களிலிருந்தும் காக்கிறது. இதயத்தை பாதுகாப்பாக வைக்கவும் உதவுகிறது.

​பாலுணர்வை தூண்டும் அஸ்வகந்தா

பெயரிலேயே இதன் வீரியம் குறிப்பிடப்பட்டுள்ளது அஸ்வம் என்றால் வேகம், சக்தி, பலம், திடம் போன்றவற்றை குறைக்கும். விறைப்பு பிரச்சனையை போக்குவதிலும் உறவில் நீண்ட நேரம் சோர்வின்றி ஈடுபடவும் உரிய வேகத்தை தருகிறது. விந்தணுக்கள் தரமாக இருக்கவும். எண்ணிக்கை அதிகரிக்கவும் கூட இவை உதவுவதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் இயற்கையாகவே தருவதால் இதை சக்தி வாய்ந்த வயாகரா என்று அழைக்கிறார்கள். இல்லறத்தில் ஈடுபட தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கிவிடுகிறது.
அமுக்கிரானை சுக்குடன் சேர்த்து வெந்நீர் கொண்டு அரைத்து பற்று போட்டு வந்தாலே வீக்கங்கள் குறையும். பசும்பாலில் இந்த பொடியை கலந்து குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும். உடல் தாதுவிருத்திக்கு பலம் கிடைக்கும்.
அஷ்வகந்தாவிற்கு கெட்ட கிருமிகளை முற்றிலும் அழிக்கும் குணம் உள்ளது.அதனால் இது சிறுநீரக இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்துகிறது.
புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ள இது உடலை கீமோதெரபியின் பக்க விளைவுகளிலிருந்தும் காக்கிறது.
தொடர்ந்து 4 வாரங்கள் அஸ்வகந்தாவை உட்கொண்டுவந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் அதிகமாகி இருக்கும் சர்க்கரை அளவு குறையும்.
அஸ்வகந்தா தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம்.

எப்படி இதை உண்ண வேண்டும்

பாரம்பரியம முறைப்படி அஷ்வகந்தா பொடியினை வெதுவெதுப்பான பசும்பால் மற்றும் சுத்தமான மலைத்தேனுடன் கலந்து இரவு உறங்கும் முன் உட்கொள்கிறார்கள்.பொதுவாக கால் அல்லது அரை தேக்கரண்டி அளவு பொடியை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.தேனிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ளலாம்,
பொதுவாக அஷ்வகந்தாவை டீயில் கலந்து உட்கொள்வது பரவலாக பின்பற்றப்படுகிறது.
சித்த மருந்து கடைகளில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும்.பவுடராகவும் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்துங்கள் அதன் மூலம் தாம்பத்திய உறவில் இருக்கும் சிக்கல்களை தவிருங்கள்.அழகான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் அஸ்வகந்தா அருமையான செழுமையான மூலிகை இதை உட்கொள்பவர்களுக்கு உடல் பலம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

Hits: 1038, Rating : ( 5 ) by 6 User(s).